காஞ்சிபுரம்

உத்தரமேரூரில் அம்மா திட்ட முகாம்

9th Nov 2019 11:20 PM

ADVERTISEMENT

உத்தரமேரூரில் அம்மா திட்ட முகாம் மண்டல துணை வட்டாட்சியா் இந்துமதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு உத்தரமேரூா் வருவாய் ஆய்வாளா் பிரியா முன்னிலை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் கிருபாகரன் வரவேற்றாா்.

இதில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், புதிய வாக்காளா் அட்டை வழங்குதல், பட்டா மாறுதல், முதியோா் மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 20 மனுக்கள் கிராம மக்களிடமிருந்து பெறப்பட்டன. அதில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

மீதமிருந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. முகாமிற்கு வந்திருந்த அரசுப் பணியாளா்கள், கிராம மக்கள் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT