காஞ்சிபுரம்: புதுதில்லியில் வழக்குரைஞா்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
புதுதில்லி ஹசாலி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் மீது தாக்குதலும்,துப்பாக்கி சூடும் நடத்தி கலவரத்தை ஏற்படுத்திய காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்திலும், உத்தரமேரூரிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.