காஞ்சி மகா பெரியவர் ஜயந்தி மகோற்சவம்: தங்கத்தேரில் பவனி வந்த மகா பெரியவர்

காஞ்சி மகாபெரியவரின் 126-ஆவது ஜயந்தி மகோற்சவத்தையொட்டி, தங்கத்தேரில் மகாபெரியவர் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 

காஞ்சி மகாபெரியவரின் 126-ஆவது ஜயந்தி மகோற்சவத்தையொட்டி, தங்கத்தேரில் மகாபெரியவர் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகாபெரியவரின் 126-ஆவது ஜயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. 
மகாபெரியவர் தியான மண்டபத்தில்..: சங்கர பக்த ஜனசபா டிரஸ்ட் சார்பில் காஞ்சி காமகோடி மகாபெரியவரின் 126-ஆவது ஜயந்தி மகோற்சவம் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 
இதைத்தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக தேனம்பாக்கத்தில் உள்ள மகாபெரியவர் தியான மண்டபத்தில் நாள்தோறும் காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டன.  
ரிக் வேத, சுக்ல யஜுர், யஜுர் வேத, தைத்ரீய சம்ஹிதை, சாம வேத கெüதம சாகை, வேத பாராயணங்கள் ஆஸ்தான கனபாடிகள், வித்யார்த்திகள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றன. 
இதையடுத்து, ஜயந்தி நாளான ஞாயிற்றுக்கிழமை மகாபெரியவர் பிருந்தாவனத்தில் சிறப்புப் பூஜைகள், ஆராதனை, வேதபாராயணம் நடத்தப்பட்டன. 
சங்கர மடத்தில்  மகாசுவாமிகளின் பஞ்சலோக சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் மகாபெரியவர் எழுந்தருளினார். தொடர்ந்து, சங்கர மடத்திலிருந்து தொடங்கி 4 ராஜவீதிகளிலும் மகாபெரியவர் தங்க ரதத்தில் பவனி வந்தார். 
அப்போது, வேதியர்கள் மூலம் வேத பாராயணம், நாகஸ்வரம், கேரள பஞ்சவாத்யம், பஜனையுடன் தங்கரதம் பவனி வர, ராஜவீதிகளின் இரு புறத்திலும் திரளான பக்தர்கள் மகா பெரியவரை வழிபட்டனர். 
மகோற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் சங்கரமடத்துக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து மகா பெரியவரின் பிருந்தாவனத்தில் வழிபட்டனர். 
காலை 8 மணிக்கு ருத்ர ஏகாதசியும், நண்பகல் 12 மணி முதல் பூர்ணாஹுதி, மகாபெரியவருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், சங்கர பக்த ஜனசபா அறக்கட்டளை நிர்வாகி எஸ்.குருமூர்த்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com