புதன்கிழமை 17 ஜூலை 2019

வராகர் ஜெயந்தி: ஆதிவராகர் கோயிலில் சிறப்புப் பூஜைகள்

DIN | Published: 04th May 2019 04:08 AM
வராகர் ஜெயந்தியையொட்டி மாமல்லபுரம்  ஆதிவராகர் கோயிலில் நடைபெற்ற சிறப்புத் திருமஞ்சனம்.


மாமல்லபுரம் ஆதிவராகர் கோயிலில் வராகர் ஜெயந்தியையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
மாமல்லபுரம் லைட் ஹவுஸ் சாலையில் பொதுப் பணித்துறை பங்களா அருகில் ஆதிவராகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வராகர் ஜெயந்தியையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிவராகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.  
 ஏராளமான பக்தர்கள் வராகர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு பெருமாளைத் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பு: மீன்பிடிப் படகு உடைந்தது
ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பு: பயணிகள் மறியல்
காமராஜரின் 117-ஆவது பிறந்த தின விழா
கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஆனி மாத பௌர்ணமி விழா
பிடாரி செல்லியம்மன் கோயில் தேரோட்டம்