சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு தொடங்கியது

DIN | Published: 04th May 2019 04:08 AM
தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய  எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர்.


காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு 1லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நுழைவுத் தேர்வு, கணினி மூலம் எழுதப்படும் தேர்வு 123 நகரங்கள் மற்றும் 5 மத்தியக் கிழக்கு நாடுகளிலும் ஏப்ரல் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.  இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 
 இதில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் , மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த மாணவர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர். 310 மாணவர்கள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்தும், 150 மாணவர்கள் வடகிழக்கு மாநிலப் பகுதியில் இருந்தும் வெற்றி பெற்றுள்ளனர்.  
ஒவ்வொரு நாளும் நடைபெறும் கலந்தாய்வில் சுமார் 16ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  முதல் நாள் கலந்தாய்வில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 
62 மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் படிப்பிற்கான இடஒதுக்கீடு சான்றிதழ்களும், நுழைவுத் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு இலவச கல்விக்கான சான்றிதழ்களும், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 100 முதல் 25 சதவீதம் வரை கல்வி கட்டணச் சலுகை மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணச் சலுகைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  கலந்தாய்வில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்து கலந்துகொண்டனர்.
 கோமதி மாரிமுத்துவுக்கு நிதி: முன்னதாக, ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவை பாராட்டி நிதியுதவியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர் வழங்கினார். 

 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கல்லூரி ஆண்டு விழா
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இளைஞர் வெட்டிக் கொலை