மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் முற்றுகை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாமல்லபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற அனைத்து  கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளியே சென்ற பேரூராட்சி செயல் அலுவலரை கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் முற்றுகை


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாமல்லபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற அனைத்து  கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளியே சென்ற பேரூராட்சி செயல் அலுவலரை கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன . இந்த வார்டுகளை வரையறை செய்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. பல்வேறு கட்சி நிர்வாகிகள்  இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
அப்போது மாமல்லபுரத்தில் உள்ள 15 வார்டுகளை வரையறை செய்து குறைந்த மக்கள்தொகை உள்ள வார்டுகளை, அதிக மக்கள்தொகை உள்ள வார்டுகளில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர், வார்டுகளை பிரிக்கக் கூடாது. தற்போது எப்படி வார்டுகள் உள்ளனவோ அப்படியே தொடர்ந்து இருக்க வேண்டும். அவற்றை மறுவரையறை செய்யக் கூடாது என்று கூறியதால் வாக்குவாதம் எழுந்தது. கூச்சல், குழப்பம் ஏற்பட்டதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் கூட்டத்தை விட்டு வெளியேறினர். அப்போது கட்சியினர் அந்த அலுவலக வாயிலில் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்னைக்குப் பிறகு பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில் வார்டுகளை வரையறை செய்வது பற்றி உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஏற்கெனவே இருந்தது போல் அவை நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்றார். இதையடுத்து அரசியல் கட்சியினர் கலைந்துசென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com