22 செப்டம்பர் 2019

காஞ்சிபுரம் அத்தி வரதர் பெருவிழா: அனந்தசரஸ் குளத்து நீரை வெளியேற்றும் பணி தொடக்கம்

DIN | Published: 08th June 2019 12:00 AM


அத்திவரதர் பெருவிழாவையொட்டி அனந்தசரஸ் குளத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவுள்ள அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. 

இதையொட்டி வாகன நிறுத்துமிடம் அமைத்தல், கண்காட்சி அமைத்தல் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

இந்த விழாவையொட்டி, அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதரை மேலே கொண்டு வருவதற்கான பணிகளை எல் அண்ட்  டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

இதன் முதல் கட்டமாக, வரதரின் கோடை வசந்த உற்சவம், தீர்த்தவாரிக்குப் பிறகு, அனந்தசரஸ் குளத்தின் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் தெரிவித்திருந்தார். 

அதன்படி, ஜூன் 6-ஆம் தேதி தீர்த்தவாரி நிறைவு பெற்றதையடுத்து, திருக்குளத்தின் நீரை வெளியேற்றுவதற்காக மின் மோட்டார்கள் குளத்தில் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, குழாய்கள் இணைக்கப்பட்டு, அனந்தசரஸ் குளத்து நீரை பொற்றாமரை குளத்துக்கு  மாற்றுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இன்னும் ஓரிரு நாளில் இப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவில் 1.50 கோடி போ் வேலையிழக்கும் அபாயம்: சிஐடியு அகில இந்திய பொதுச் செயலா் தபன்சென்
கட்டியாம்பந்தலில்  இலவச மருத்துவ முகாம்
திருமலைவையாவூா் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
இடிவிழுந்து தென்னை மரத்தில் தீ