காஞ்சிபுரம்

அத்திவரதர் பெருவிழா: பாதுகாப்புப் பணிக்கு வந்த டி.எஸ்.பி. வாகனம் பழுது

27th Jul 2019 04:22 AM

ADVERTISEMENT


அத்திவரதர் பெருவிழா பாதுகாப்புப் பணிக்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளரின் வாகனம் வெள்ளிக்கிழமை மாடவீதியில் திடீரென பழுதாகி நின்றது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழா கடந்த முதல் தேதியிலிருந்து தொடர்ந்து 26 நாள்களாக நடந்து வருகிறது. 
இவ்விழாவுக்கு தினசரி திரளான பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்  வந்துள்ள சுமார்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளரது வாகனம் முக்கியப் பிரமுகர்கள் செல்லும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற போது வாகனம் பழுதாகியிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பலரும் அந்த வாகனத்தைத் தள்ளிச் சென்று போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நிறுத்தி வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT