எடையார்பாக்கம் ஏரியில் குடிமராமத்துப் பணி : ஆட்சியர் ஆய்வு

சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள எடையார்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
எடையார்பாக்கம் ஏரியில் குடிமராமத்துப் பணி : ஆட்சியர் ஆய்வு


சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள எடையார்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள எடையார்பாக்கம், நாவலூர், வெள்ளாரை, அழகூர் ஆகிய 4 ஏரிகளில் நடப்பு நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், வெள்ளாரை, நாவலூர், எடையார்பாக்கம் ஆகிய ஏரிகளில் ரூ1.60 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் கடந்த 10 நாள்களுக்கு முன்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது. 
இப்பணிகளின்போது, ஏரிக்கரைகள், மதகுகள், நீர்வரத்துக் கால்வாய்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், எடையார்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 
பின்னர், ஆட்சியர் பா.பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியது:  நடப்பு நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15.78 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 38 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன என்றார். 
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் என்.என்.தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், நேர்முக உதவியாளர் பாஸ்கரன், உதவிப் பொறியாளர்கள் மார்க்கண்டேயன், பாஸ்கரன், ஏரிப் பாசன சங்கத் தலைவர் மூர்த்தி, விவசாய சங்கத் தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் லோகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் வட்டத்துக்கு உள்பட்ட வையாவூர்-மாம்பட்டு ஏரியில் ரூ.45 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் சீனிவாசராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 
வையாவூர்-மாம்பட்டு ஏரியில் குடிமராமத்துப் பணிகள் கடந்த ஜூன் 29-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ.45 லட்சம் மதிப்பில், ஏரியை தூர்வாருதல், மதகுகளை புதுப்பித்தல், கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட  பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதனை கண்காணிப்பு அலுவலர் சீனிவாசராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் பி.கே.சுப்பிரமணி, இளநிலைப் பொறியாளர் ஜி.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் சீனிவாச ராவ், பள்ளிப்பட்டு, விளாங்காடு, கோட்டை, கயப்பாக்கம் ஆகிய ஏரிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com