காமராஜரின் 117-ஆவது பிறந்த தின விழா

காமராஜரின் 117-ஆவது பிறந்த தினத்தை மாமல்லபுரம் சுற்று வட்டார அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் கொண்டாடினர். 
காமராஜரின் 117-ஆவது பிறந்த தின விழா


காமராஜரின் 117-ஆவது பிறந்த தினத்தை மாமல்லபுரம் சுற்று வட்டார அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் கொண்டாடினர். 
பூஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாமல்லபுரம் வட்டார நாடார் சங்கத்தின் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.சரவணக்குமார், பொருளாளர் ஜே.முத்துப்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் இரண்டாம் ஆண்டாக ரத்த தான முகாம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களை பரிசோதனை செய்து ரத்தம் தரத் தகுதியான 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
இதையடுத்து, மாமல்லபுரம், பூஞ்சேரி, தேவனேரி, கொக்கிலமேடு, சாலவான் குப்பம் உள்ளிட்ட 8 அரசுப் பள்ளிகளுக்கு அவர்கள் சென்று  காமராஜரின்  உருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா பென்சில், இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் கல்வி உதவித்தொகையையும் வழங்கினர். விழாவில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில்...
காமராஜரின் 117-ஆவது பிறந்த தின விழா வெங்காடு அரசு உயர்நிலை பள்ளியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் 60 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்ட காமராஜர் படத்தை வரைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வெங்காடு மற்றும் இரும்பேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
இப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-ஆவது பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் புருஷோத்தமன்  தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், 60 அடி நீளம் 40 அடி அகலத்தில் காமராஜர் உருவப் படத்தை பள்ளி மாணவர்கள் வரைந்தனர். இதை ஸ்ரீபெரும்புதூர் மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இதையடுத்து, பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட மூன்றாம் சக்தி' என்ற மாத இதழை ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கித் தலைவர் வெங்காடு உலகநாதன் வெளியிட்டு, பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் வெங்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன்,  தனியார் நிறுவனத்தின் மனித வள மேலாளர்கள் டேனியல், கென்னடி, ஜெயவேலு, அன்பு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 
விழாவின் ஒரு பகுதியாக எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து அட்டைகளை மாணவர்கள் அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com