21 ஜூலை 2019

முழுநேர கூட்டுறவுப் பட்டயப் பயிற்சி: விண்ணப்பிக்கும் நாள் நீட்டிப்பு

DIN | Published: 12th July 2019 04:21 AM


முழுநேர கூட்டுறவுப் பட்டயப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். 
ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரில் அண்ணா கூட்டுறவு  மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நிகழாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு ஜூன் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூலை 10-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  இப்பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடங்குகி, 36 வாரங்கள் நடைபெறவுள்ளது. பிளஸ் 2 தேர்வானவர்கள், பிளஸ் 2 முடித்து, பட்டம் பெற்றோர் இதில் சேரத் தகுதியுடையோர் ஆவர். 
வயது வரம்பு: ஜூன் 1-ஆம் தேதியன்று 17 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். 
பயிற்சிக் கட்டணம்: பயிற்சிக்கான கட்டணம் ரூ.14,850 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான விண்ணப்பங்களை பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 5-ஏ, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631501 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-27237699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்: ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம் அறிமுகம்
எடையார்பாக்கம் ஏரியில் குடிமராமத்துப் பணி : ஆட்சியர் ஆய்வு
மேல்மருவத்தூர் கோயில்களில் ஆடித் திருவிழா
கோயில் குளம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
வருமானவரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்