காஞ்சிபுரம்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

12th Jul 2019 04:22 AM

ADVERTISEMENT


 பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.  
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வேட்டைக்காரன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். 
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி சிறுமி வயல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். 
அப்போது அதே ஊரைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் ஜெகதீசன் (21), சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  மகள் பாதிக்கப்பட்டது குறித்து பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
அதன்பின் ஜெகதீசன் ஜாமீனில் வெளி வந்தார். இவ்வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெகதீசனுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து, போலீஸார் ஜெகதீசனை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சீதாலட்சுமி ஆஜரானார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT