21 ஜூலை 2019

கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்

DIN | Published: 12th July 2019 04:23 AM


அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம், எல்.எண்டத்தூர், பாப்பாநல்லூர், எலப்பாக்கம், ராமாபுரம், செண்டிவாக்கம் ஆகிய 6  கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், மதுராந்தகம் கால்நடை பராமரிப்புத்துறை, அஸ்காட் திட்டம் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் இரா.அழகுவேல் தலைமை வகித்தார். 
இதில், கால்நடை மருத்துவமனை மருத்துவரும், உதவிப் பேராசிரியருமான துரைராஜ், உதவி மருத்துவர்கள் மனோன்மணி, பாபு, பிரசன்னா, சுல்தானா பேகம் உள்ளிட்டோர் பங்கேற்று, கால்நடைகளுக்கு வரும் நோய்கள் குறித்தும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கினர். 
இந்த முகாமில் கால்நடைகளை சிறப்பாக பராமரித்து வரும் விவசாயிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்: ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம் அறிமுகம்
எடையார்பாக்கம் ஏரியில் குடிமராமத்துப் பணி : ஆட்சியர் ஆய்வு
மேல்மருவத்தூர் கோயில்களில் ஆடித் திருவிழா
கோயில் குளம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
வருமானவரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்