காஞ்சிபுரம்

ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க ஊழியர் சாலை விபத்தில் பலி

12th Jul 2019 04:21 AM

ADVERTISEMENT


திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (50). இவர் கூட்டுறவு பண்டகசாலையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் முனியன் (60). இவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க ஊழியர். இவர்கள் இருவரும் புதன்கிழமை காஞ்சிபுரம் சென்று விட்டு, இருசக்கரவாகனத்தில் திருக்கழுகுன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 
செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, திடீர் பிரேக் போட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 
இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முனியன் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்து, செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT