காஞ்சிபுரம்

ராகிங் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

4th Jul 2019 04:24 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் ஸ்ரீமாலோலன் கலை, அறிவியல் கல்லூரியின் சார்பில், ராகிங்  குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் வி.சுபத்ரா தலைமை வகித்து, சிறப்புரை ஆற்றினார். துணை முதல்வர் எஸ்.திருமலை, மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளர் எம்.கலீல், வழக்குரைஞர் டி.சசிகுமார் ஆகியோர், ராகிங் கொடுமை, மாணவர் நன்னடத்தை, நல்லிணக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இதில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகிங் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான சி.ஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT