மாமல்லபுரம் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்துக்கு வருவோரின் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளை காவல்துறையும்,
மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கச் செல்லாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கச் செல்லாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.


காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்துக்கு வருவோரின் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளை காவல்துறையும், கடலோரக் காவல்படையும் இணைந்து செய்து வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து, மாமல்லபுரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
அத்துடன் வெளிமாநிலங்களில் இருந்து, மேல்மருவத்தூர் தைப் பூச விழாவுக்கு வரும் பக்தர்களும் பேருந்துகளில் மாமல்லபுரத்துக்கு வந்து செல்கின்றனர்.
இப்பேருந்துகளை நிறுத்த போதிய இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையில் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம்,
கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு இறுதியில் மாமல்லபுரம் கடற்கரைக்கு வருவோர் பெரும்பாலும் கடலில் இறங்கி குளிக்க முற்படுவதை போலீஸாரால் தடுக்க முடியவில்லை.
இச்சூழலில் மாமல்லபுரத்துக்கு காணும் பொங்கல் அன்று கட்டுக்கடங்காத சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும் என்பதால் போலீஸார் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜ் கூறியது:
ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடி முடித்து விட்டு, காணும் பொங்கல் அன்று குடும்பத்துடன் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் அலையின் ஆபத்து தெரியாமல் கடலில் குளிக்கும் ஆர்வத்தில் அலையில் சிக்கி உயிரிக்கின்றனர்.
இதையடுத்து, இந்தாண்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில், போலீஸார், ஊர்க் காவல் படையினர், கடலோரக் காவல் படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடலில் குளிப்போரின் உயிரிழப்பைத் தடுக்க ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடல் அலையில் யாரேனும் சிக்கினால் அவர்களை உடனடியாக மீட்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com