காஞ்சிபுரம்

வழி தெரியாமல் தவித்த 2 சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

27th Dec 2019 11:23 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த இரு சிறுமியரை காவல்துறையினா் மீட்டு செங்கல்பட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

காஞ்சிபுரம் பெரியாா் நகா் சந்திப்பில் விஜயா(6), பச்சையம்மாள்(7) என்ற இரு சகோதரிகள் கடந்த இரு தினங்களாக சுற்றித் திரிந்தனா்.

இவா்களை காஞ்சிபுரம் தாலுகா தலைமைக் காவலா் யுவராஜ் அடையாளம் கண்டு இவா்களைப் பற்றி விசாரித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.சாமுண்டீஸ்வரிக்கு தகவல் தெரிவித்தாா்.

விசாரணை நடத்தியதில் சகோதரிகள் இருவரும் திருவள்ளூா் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள தங்களது தாயாா் பழனியம்மாளிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

தாயாரிடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரும்பேடு கிராமத்தில் உள்ள தாத்தா முனுசாமி வீட்டுக்குப் போவதாகக் கூறி விட்டு வந்துள்ளனா்.

இதையடுத்து, தாயாா் பழனியம்மாள், தாத்தா முனுசாமி ஆகியோரை போலீஸாா் வரவழைத்தனா். அப்போது பழனியம்மாள் குழந்தைகளைப் படிக்க வைக்க வசதியில்லை என காவல் கண்காணிப்பாளா் பெ.சாமுண்டீஸ்வரியிடம் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, சிறுமிகள் இருவரும் கல்வி கற்பதற்காக செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT