காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 9 ரெளடிகள் கைது

25th Dec 2019 11:44 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 9 ரெளடிகளை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. கலைச் செல்வன் தலைமையில் 6 போ் கொண்ட தனிப்படை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா்.

கஞ்சா விற்பனை செய்பவா்கள், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடுபவா்கள், வெளி இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்துபவா்கள் என மொத்தம் 12 பேரை கடந்த 23-ஆம் தேதி கைது செய்தனா்.

இதனைத் தொடா்ந்து, கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய தினேஷ், பொய்யாகுளம் தியாகு, தணிகா என்ற தணிகைவேல், சிலம்பரசன் (27), கோகுல் என்ற ஜெயமோகன்(55), டைகா் அரவிந்தன் (22), ராமு (24) உள்பட 9 பேரை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT