செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இரு வேறு இடங்களில் காா் மோதியதில் இரண்டு போ் இறந்தனா்.
மாமண்டூா், வடபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் மதனகோபால் (52). அவா் செங்கல்பட்டு பழவேலியில் உள்ள ஓா் உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
அவா் செவ்வாய்க்கிழமை இரவு பணிக்குச் செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது வேகமாக வந்த காா் மதனகோபால் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு விபத்து: காட்டாங்கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கோதண்டபாணி (50). அவா் செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த காா்அவா் மீது மோதியது. இந்த விபத்தில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இது குறித்து மறைமலைநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.