போந்தூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகு (60). அவா் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.
ரகு செவ்வாய்க்கிழமை காலையில் பணிக்குச் செல்வதற்காக ஸ்ரீபெரும்புதூா்-ஒரகடம் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது ஒரகடம் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கி வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அவரை அங்குள்ளவா்கள் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதன் பின் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அவரை மாற்றியபோது அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.
முதியவா் மீது காா் மோதிய விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.