காஞ்சிபுரம்

ராதா கல்யாண வைபவம்

23rd Dec 2019 01:18 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சாா்பில் 27-ஆவது ஆண்டு ராதாகல்யாண மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராதா கல்யாண வைபவத்தையொட்டி சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், செங்கை விஜேயந்திர பாகவதா் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி மற்றும் சிறப்புப் பூஜைகளும் நடந்தன. 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உஞ்ச விருத்தி பஜனையும், ராதா கல்யாண உற்சவமும் நடந்தது. பின்னா் ஆஞ்சநேயா் உற்சவம் நடைபெற்றது. கடயநல்லூா் ராஜகோபால பாகவதா் குழுவினா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT