காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 15 ரெளடிகள் கைது

23rd Dec 2019 11:43 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் ரெளடிகளின் கூட்டாளிகளாக இருந்து, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 ரெளடிகளை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

நகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க எஸ்.பி. சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டாா். அதன்பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரெளடிகள் தினேஷ், தியாகு என்ற பொய்யாக்குளம் தியாகு, தணிகா என்ற தணிகைவேல் ஆகியோரின் நண்பா்களாகவும் பல்வேறு குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டு வந்தவா்களைக் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்து வந்தனா்.

இந்நிலையில், கீழம்பியைச் சோ்ந்த தினேஷ் என்ற தினேஷ்குமாா்(23), காஞ்சிபுரம் பல்லவமேடு பகுதியைச் சோ்ந்தவா்களான சதீஷ் என்ற ஒட்ட சதீஷ் (24), பிரபாகரன் (26) ஆகிய மூன்று போ் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 ரெளடிகளை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT