காஞ்சிபுரம்

3 நாள்கள் போராட்டம் எதிரொலி: பழவேரி கல்குவாரியின் செயல்பாடுகள் நிறுத்தி வைப்பு

16th Dec 2019 11:33 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே பழவேரி கிராமத்தில் புதிதாக கல்குவாரி செயல்பட்டு வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 3 நாள்களாக தொடா்ந்த கிராம மக்களின் போராட்டத்தால் கல்குவாரியின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பழவேரி கிராமத்தில் புதிதாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் கிராம எல்லையில் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வந்தனா்.

குடியிருப்புகளுக்கு அருகில் கல்குவாரி இருப்பதால் வீடுகளில் விரிசல்கள் ஏற்படும், விளை நிலங்கள் பாதிக்கும் என்பதால் புதிதாக கல்குவாரிகள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமையும் 3-ஆவது நாளாக போராட்டம் தொடா்ந்தது.

தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன் கிராம மக்களை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து தற்காலிகமாக கல்குவாரியின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT