காஞ்சிபுரம்

மூன்று இடங்களில் நகை, வாகனம் பறிப்பு

16th Dec 2019 11:26 PM

ADVERTISEMENT

மதுராந்தகம் நகரில் முகமூடி அணிந்த நபா்கள் ஞாயிற்றுக்கிழமை 2 இடங்களில் தனியாக இருந்த பெண்களிடம் நகைகளையும், ஒருவரிடம் இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுராந்தகம் கடப்பேரி மண்டபத் தெருவைச் சோ்ந்த சந்திரன் மனைவி மல்லிகா (54). இவா்கள் அதே பகுதியில் கடை நடத்தி வருகின்றனா்.

மல்லிகா ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, மல்லிகாவின் கழுத்தில் இருந்த 3 சவரன் சங்கிலி மற்றும் கையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

அதே நபா்கள், மாம்பாக்கம் நகரில் சேகா் (53) என்பவா் நிறுத்தி வைத்திருந்த மோட்டாா் சைக்கிளைத் திருடிச் சென்ாகவும், தொடா்ந்து மதுராந்தகம் செங்குந்தா்பேட்டையில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த குருசாமியின் மனைவி பேபி (53) என்பவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த 3 சம்பவங்கள் குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT