காஞ்சிபுரம்

மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 11:28 PM

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராடி வரும் மாணவா்கள் மீது தில்லியில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி இளைஞா் மேம்பாட்டு மைய மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். இந்நிலையில், இந்த மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமாா் 100 போ் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT