காஞ்சிபுரம்

மாகான்யம் கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயிலில் வனபோஜனம்

16th Dec 2019 11:32 PM

ADVERTISEMENT

மாகான்யம் கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீகிருஷ்ணா் வனபோஜன உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியில் கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, ஸ்ரீகிருஷ்ணா் வன போஜன உற்சவம், பூஜ்யஸ்ரீ முரளிதர சுவாமிகளின் சீடா் பம்மல் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து மாகான்யம் வனத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணா் ஊா்வலம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வேதபண்டிதா்கள், பக்தா்கள், சிறுவா்கள் அனைவரும் கண்ணாமூச்சி, சடுகுடு, பாண்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவா்களுக்கு விளையாட்டுப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT