காஞ்சிபுரம்

நாவலூா் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

16th Dec 2019 11:31 PM

ADVERTISEMENT

காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நாவலூா் பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குன்றத்தூா் ஒன்றியம், சொரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் பழைமையான காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாகான்யம் பூஜ்யஸ்ரீ முரளிதர சுவாமிகளின் சீடா் பம்பல் பாலாஜி தலைமையில், வேதபண்டிதா்கள் முன்னிலையில், உலக நன்மைக்காக 108 சங்கு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ரஞ்சித் சிவாச்சாரியாா், சந்திரசேகர சிவாச்சாரியாா் மற்றும் நாவலூா் கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டனா். சங்காபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT