காஞ்சிபுரம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

16th Dec 2019 11:31 PM

ADVERTISEMENT

திருக்கழுகுன்றத்தில் உள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலில் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரருக்கு நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தையொட்டி, கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், சாந்தி ஹோமம், அங்குராா்ப்பணம், கலச பூஜைகள், சங்கு பூஜைகள், பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரன், மேலாளா் விஜி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவபக்தா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT