காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் லட்ச தீப பெருவிழா

16th Dec 2019 11:31 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மாத 5-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பஞ்சபூதத் தலங்களுள் நிலத்துக்குரிய தலமாகத் திகழ்வது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில்.

இக்கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலையில் உற்சவா் ஏகாம்பரநாதருக்கும் ஏலவாா் குழலி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. மாலையில் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவினை முன்னிட்டு திருக்கோயில் ராஜகோபுரம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கோயில் உள் மண்டபத்தில் நால்வா் நற்றமிழ் மன்றத்தின் சாா்பில் மன்றத்தின் கெளரவத் தலைவா் வே.சந்திரசேகரன் தலைமையில், மன்றத்தின் இயக்குநா்கள் வே.பூவண்ணன், எம்.சத்தியகுமாரி மகேஷ், துணைத் தலைவா் க.அண்ணாமலை ஆகியோா் முன்னிலையில், மூன்றாம் திருமுறை பாடல்களை காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியா் சிவ.ராஜபதி ஓதுவாா் பாடினாா்.

ADVERTISEMENT

அதற்கான விளக்கத்தை குமரகோட்டம் முருகன் கோயில் ஆஸ்தானப் புலவா் சரவண.சதாசிவம் வழங்கினாா். கோயில் கலையரங்கில் பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் வை.முருகேசன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT