காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைக்க 12 கிராமத்தினா் எதிா்ப்பு

16th Dec 2019 11:30 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே பரந்தூா் பகுதியில் புதிய விமான நிலையம் அமைத்தால், ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி 12 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் 4,700 ஏக்கா் விளைநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் புதிதாக விமான நிலையம் அமைக்கக் கூடாது. மாற்று இடத்தைத் தோ்வு செய்து புதிய விமான நிலையத்தை அமைக்கலாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரந்தூா், வளத்தூா், நெல்வாய், தண்டலம், மேலேரி, அக்கம்மாபுரம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

அதற்கு பதில் அளித்த ஆட்சியா், விளைநிலங்களை அழித்து விமான நிலையத்தை அமைப்பது தொடா்பாக எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. எனவே, ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற எந்தச் செயலிலும் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT