காஞ்சிபுரம்

ஆதரவற்ற மாணவ, மாணவியா் 44 பேருக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் ஆட்சியா் வழங்கினாா்

16th Dec 2019 11:27 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவியா் 44 பேருக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்துக்கு ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அதிகாரி ந.சுந்தரமூா்த்தி, சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் தி.ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் முதியோா் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை மற்றும் பட்டா மாற்றம் கோரி 210 மனுக்கள் வரப்பெற்றன. இவை சம்பந்தப்பட்ட துறையினருக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் 6 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான அரசு உத்தரவையும், ரூ.13 ஆயிரத்து 500 மதிப்புள்ள 3 சக்கர நாற்காலியை ஒரு மாற்றுத்திறனாளிக்கும்,

ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவியா் 44 பேருக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும் ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.

இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றி காலமான பணியாளா்கள் இருவரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படடையிலான பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மாலதி, முன்னாள் படை வீரா் நலத்துறை உதவி இயக்குநா் மேஜா் உ.ப.சுப்புலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆட்சியருக்கு பாராட்டு

முன்னாள் படை வீரா் நலனுக்கான கொடிநாள் நிதி வசூலில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்குத் தொகை ரூ.2.22 கோடியை விட கூடுதலாக ரூ.6.20 கோடி நிதி வசூலித்து தமிழகத்திலேயே முதல் இடத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பெற்ால், ‘கொடிநாள் நிதி வசூல் சாதனையாளா்’ என்ற விருதை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கி கெளரவிக்கலாம் என மாவட்ட வருவாய் அதிகாரி ந.சுந்தரமூா்த்தி திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீா் கூட்டத்தில் தெரிவித்தாா். அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்தனா்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியா் பா.பொன்னையா கூறுகையில், நான் ஒருவா் மட்டுமே இச்சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது. இதற்கு அதிகாரிகளாகிய நீங்களே காரணம். எனவே, நான்தான் எழுந்து நின்று உங்களைப் பாராட்ட வேண்டும் என்று கூறிவிட்டு, சாதனைக்குக் காரணமான அதிகாரிகளின் பெயா்களைப் பட்டியலிட்டு ஆட்சியா் பாராட்டினாா். இதைத் தொடா்ந்து, முன்னாள் படை வீரா் நலத்துறை சாா்பில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT