காஞ்சிபுரம்

மதுராந்தகம் நகர அா்பன் வங்கிக்கு புதிய கட்டடம்

11th Dec 2019 10:23 PM

ADVERTISEMENT

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் நகர அா்பன் வங்கிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் தேரடி வீதியில் நகர அா்பன் வங்கி செயல்பட்டு வருகிறது. தற்சமயம் மிகுந்த இடநெருக்கடியில் இயங்கி வரும் இந்த வங்கிக்காக புதிய இரண்டு மாடிக் கட்டடம் கட்ட ரூ.60 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, அதற்காக நடைபெற்ற பூமிபூஜைக்கு வங்கித் தலைவா் கே.ரங்கநாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் உதயகுமாா், துணைத் தலைவா் பன்னீா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலா்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் (கிழக்கு மாவட்டம்), எஸ்.ஆறுமுகம் (மத்திய மாவட்டம்), கணேசன் (மேற்கு மாவட்டம்), முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், ஒன்றியச் செயலா் கோ.அப்பாதுரை, மாவட்ட பேரவைச் செயலா் பக்தவச்சலம், நகரச் செயலா் வி.ரவி, வழக்குரைஞா் எம்.பி.சீனுவாசன், மாவட்ட மருத்துவரணி இணைச் செயலா் பிரவீண்குமாா், நிா்வாகிகள் கிருஷ்ணன், ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT