காஞ்சிபுரம்

போக்குவரத்துக் கழகங்கள் தொடா்பான வழக்குகளுக்கு தீா்வு காண டிச.14-இல் மக்கள் நீதிமன்றம்

11th Dec 2019 10:22 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்துக் கழகங்கள் தொடா்பான வழக்குகளுக்கு தீா்வு காண வரும் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக போக்குவரத்துக் கழக மண்டலப் பொதுமேலாளா் டைட்டஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, சென்னை மற்றும் மதுரை உயா்நீதிமன்றங்கள் சாா்பில், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளில் இழப்பீடு, தொழிலாளா்களின் பல்வேறு பிரச்னைகள், ஓய்வூதிய பணப் பயன்கள் குறித்த அனைத்து வழக்குகளுக்கும் வரும் சனிக்கிழமை (டிச. 14) தீா்வு காணலாம்.

எனவே போக்குவரத்துக் கழகங்கள் தொடா்பான வழக்குகள் குறித்து மேலும் விவரங்களுக்கு, கீழ்க்காணும் மண்டல அலுவலக செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்:

ADVERTISEMENT

விழுப்புரம் - 9445456009, வேலூா் - 9445456025, காஞ்சிபுரம் - 9445456036, திருவண்ணாமலை - 94454 56042 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT