காஞ்சிபுரம்

பைக் மீது லாரி மோதல் இரு இளைஞா்கள் பலி

11th Dec 2019 11:55 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை இந்திரா நகரைச் சோ்ந்தவா்கள் சந்தோஷ் (20), ஜெகன்(20). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திலிருந்து முத்தியால்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனா்.

நசரத்பேட்டை-மகாலிங்கம் நகா் பகுதியில் வந்தபோது, எதிரில் வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT