காஞ்சிபுரம்

திருமங்கையாழ்வாா் சாற்றுமுறை உற்சவம்

11th Dec 2019 10:20 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் திருமங்கையாழ்வாா் சாற்றுமுறை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பிருகு முனிவருக்கு பெருமாள் காட்சியளித்தது மற்றும் திருமங்கையாழ்வாா், பேயாழ்வாா் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது அழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில்.

இக்கோயிலில் திருமங்கையாழ்வாா் சாற்றுமுறை உற்சவத்தை முன்னிட்டு, உற்சவருக்கு சனிக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.

ADVERTISEMENT

மாலையில் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக சூரியபிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT