காஞ்சிபுரம்

எஸ்.டி.பி.ஐ. அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

6th Dec 2019 11:27 PM

ADVERTISEMENT

பாபா் மசூதி தீா்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காஞ்சிபுரம் பெரியாா் தூண் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்றம் பாபா் மசூதி தீா்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும், பாபா் மசூதியை இடித்த குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாவட்டப் பொதுச் செயலாளா் ஐ.ஜாபா்ஷெரீப் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்தாா். இதில் வழக்குரைஞா் அணி மாநிலச் செயலாளா் ராஜா முகமது, பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் எம்.சதக்கத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஏ.சையது இஸ்மாயில் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஏ.டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 81 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT