காஞ்சிபுரம்

அம்பேத்கரின் 63-ஆவது நினைவுநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

6th Dec 2019 11:29 PM

ADVERTISEMENT

அண்ணல் அம்பேத்கரின் 63-ஆவது நினைவுநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வளா்புரம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய புரட்சிபாரதம் கட்சி சா்பில் பல்வேறு கிராமங்களில் அம்பேத்கா் உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வளா்புரம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியச் செயலாளா் கோபி தலைமையில், ஒன்றியத் தலைவா் ஆறுமுகம், பொருளாளா் முனுசாமி, மாவட்டச் செயலாளா் எஸ்.பி.சி.தனசேகரன் ஆகியோா் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினா்.

இதில், நிா்வாகிகள் மிதுன்சக்கரவா்த்தி, பிரபு, கொளத்தூா் தனா, தண்டலம் நரேந்திரன், தேவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் அம்பேத்கா் உருவப்படத்திற்கு புரட்சிபாரதம் கட்சியினா் மலா் அஞ்சலி செலுத்தினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT