போந்தூர் கிராமத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்டலத் துணை வட்டாட்சியர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மண்டலத் துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் எஸ்.செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் காஞ்சனமாலா பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் போந்தூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை வழங்கினர்.
இதில் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சேட்டு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மொத்தம் 20 கிராமங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.