குடிசைத் தொழிலாக விநாயகர் சிலைகளை தயாரிக்கும் கிராமங்கள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிசைத்தொழில் போலவே விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணிகளில்
விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிசைத்தொழில் போலவே விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணிகளில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 
இத்திருநாளின் போது  இந்தியா முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வர்.
பின்னர்  ஊர்வலமாக  எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது (விசர்ஜனம் செய்தல்) வழக்கமாக இருந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, செல்லியம்மன் நகர், ஏருவாய்,திம்மராஜம்பேட்டை, தாங்கி, சின்னக்காஞ்சிபுரம் மிலிட்டரி ரோடு, கீழ் ஒட்டி வாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் விநாயகர் சிலைகளைத் தயார் செய்யும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தொழிற்கூடத்திலும் சுமார் 3 அடி உயரம் முதல் 13 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் எந்தவித ரசாயனக் கலப்பும் இல்லாத பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. யானை, சிங்கம், பசு, மான், காமதேனு, மூஞ்சூறு ஆகிய வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போலவும், ஒரே விநாயகர் சிலையில் சிவனும், பார்வதியும் இணைந்து 3 முகங்களாகக் காட்சியளிப்பது போலவும் பலவிதமான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.  ஒரு விநாயகர் சிலை குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.17 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சௌந்தர்யபுரத்தைச் சேர்ந்த சிற்பத் தொழிலாளி எஸ்.பெருமாள் (40) கூறியது:
 நான் 40 ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தை மாதத்திலிருந்து ஆவணி மாதம் முடிய விநாயகர் சிலைகளைத் தயாரிப்போம். அதன் பின்னர் புரட்டாசி மாதத்துக்கு தேவையான நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்போம். விநாயகர் சதுர்த்தி வருவதற்கு 4 நாள்களுக்கு முன்பு நாங்கள் தயாரித்துள்ள சிலைகளை ஆர்டர் கொடுத்தவர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். சிலர் ஆர்டர் கொடுக்காமலும் நேரில் வந்து வாங்குவார்கள். ஆந்திர மாநிலத்தில் சித்தூர், தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை, வேலூர், ஆரணி, ஊத்துக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் தேவைப்படுவோர் எங்களிடம் வந்து வாங்கிச் செல்கின்றனர். 
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் உள்ள 18 கிராமங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் சிலை தயாரிப்பது குடிசைத்தொழிலாகவும் இருந்து வருகிறது. விநாயகர் சிலைகளின் அளவுக்கு ஏற்ற வகையிலான அச்சு (டை) பாண்டிச்சேரி மற்றும் விழுப்புரத்தில் விலைக்குக்  கிடைக்கிறது.
அதை வாங்கி வந்து பீங்கான் கழிவுத்தூள், பேப்பர்கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு, தேங்காய் நார் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அச்சில் ஊற்றி அதன் மூலமாக தேவையான வடிவத்தில் தேவையான உயரத்தில் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கிறோம் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com