காஞ்சிபுரம்

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

23rd Aug 2019 04:20 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரம் அருகே சென்னகுப்பத்திலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வட  மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித்சங்கர், இவரது மனைவி நிவிகாúúþôதவி. இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகேயுள்ள சென்னகுப்பத்தில் தங்கி, கட்டடத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.நிறைமாத கர்ப்பிணியான நிவிகாதேவிக்கு வியாழக்கிழமை மாலையில் பிரசவ வலி ஏற்பட்டது.  அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே நிவிகாதேவிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. 
குழந்தையின்  எடை  2.4 கிலோ இருந்தது. ஆம்புலன்ஸ் உதவியாளர் சதீஷ், வாகன ஓட்டுநர் புருஷோத்தமன் ஆகியோர் தாயையும், சேயையும் பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT