கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் பணி தீவிரம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி செங்கல்பட்டில் கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விற்பனைக்கு வைக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகளுடன் தயாரித்த சங்கர்.
விற்பனைக்கு வைக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகளுடன் தயாரித்த சங்கர்.


கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி செங்கல்பட்டில் கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 கிருஷ்ணஜெயந்திவிழாவையொட்டி, குழந்தை கிருஷ்ணன், தவழும் கிருஷ்ணன், ராதை கிருஷ்ணன், வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன், குழல் ஊதும் கிருஷ்ணன் என பல வகையான கிருஷ்ணர் பொம்மைகள் சிறிய மற்றும் பெரிய அளவில் தயாராகி வருகிறது. 
இதுகுறித்து செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்த பொம்மைக்காரர் சங்கர் கூறியது: 
பொம்மைகள் செய்வது எங்கள் பரம்பரைத் தொழில். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆண்டுதோறும் களிமண்ணால் பொம்மைகள் செய்து வருகிறோம். முன்பெல்லாம் கிருஷ்ண ஜெயந்தி என்றால் ஏராளமானோர் ஆர்டர் கொடுத்து பொம்மைகள் வாங்குவார்கள். தற்போது ஆர்டர் குறைந்துள்ளது. 
வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பொம்மைகளை 15 நாள்களுக்கு முன்பே அனுப்பி விடுவோம். 
சிறிய மற்றும் பெரிய பொம்மைகள் ரூ.200 முதல் ரூ.2,000 வரை அளவிற்குத் தகுந்தாற்போல் விற்பனைக்குத் தயாராக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com