அத்திவரதர் விழா: 2 நாள்கள் ஊதியத்துடன் விடுப்பு, ஊக்கத் தொகைக்கு பரிந்துரை:  ஆட்சியர்

அத்திவரதர் பெருவிழாவில் பணிபுரிந்த அனைத்துத் துறையினருக்கும் 2 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, ஊக்கத் தொகை அளிக்கப் பரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா  சனிக்கிழமை

அத்திவரதர் பெருவிழாவில் பணிபுரிந்த அனைத்துத் துறையினருக்கும் 2 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, ஊக்கத் தொகை அளிக்கப் பரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா  சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
அத்திவரதர் பெருவிழா கடந்த 48 நாள்களாக நடைபெற்று வந்தது. காணிக்கையாக ரூ.7 கோடிகிடைத்துள்ளது. தரிசனம் செய்த பக்தர்கள் சுமார் 1 கோடி பேர்.  ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசுத்துறை பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதரவற்றோர் இல்லங்களுக்குக் காலணி:  துப்புரவுப்பணி செய்ய வந்த பணியாளர்கள் மேலும் 2 நாள்கள் தங்கி காஞ்சிபுரம் நகரை சுத்தம் செய்வார்கள். தினமும் 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.  பக்தர்கள் விட்டுச் சென்ற காலணிகள் அனாதை இல்லங்களுக்கு வழங்கப்படும். 
ஊதியத்துடன் கூடிய விடுமுறை: அத்திவரதர் பெருவிழாவில் பணியாற்றிய அனைத்துத்துறை பணியாளர்களுக்கும் இரு நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பும், ஊக்கத்தொகையும் வழங்க பரிந்துரைக்கப்படும். பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். திருக்கோயில் வளாகத்தில் 46 இடங்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது  பெருமாள் திருமேனி எழுந்தருளப்படவுள்ள அனந்தசரஸ் திருக்குளத்திலும் ரகசிய கேமரா பொருத்தப்படுவதுடன் போலீஸ்  பாதுகாப்பும் போடப்படும். சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் விரைவில் அகற்றப்படும்.
 அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி.அனுமதி அட்டைகளை போலியாக தயாரித்தது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் பெருவிழாவில் தொடக்கப்பணிகளை செய்ய ரூ. 29 கோடியும், பல்வேறு அரசுத்துறைகள் சேர்ந்து ரூ. 15 கோடி  என மொத்தம் ரூ. 44 கோடி வரை அத்திவரதர் பெருவிழாவுக்காக செலவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com