கிராமங்களில் மருத்துவ முகாம்: பொதுமக்கள் கோரிக்கை

குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் சில குறிப்பிட்ட கிராமங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பரவி வரும் வைரஸ் காய்ச்சலைத் தடுக்க மருத்துவ முகாம்களை மாவட்


குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் சில குறிப்பிட்ட கிராமங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பரவி வரும் வைரஸ் காய்ச்சலைத் தடுக்க மருத்துவ முகாம்களை மாவட்ட நிர்வாகம் நடத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணிமங்கலம், சேத்துப்பட்டு, கரசங்கால் உள்ளிட்ட  கிராமங்களில் கடந்த சில நாள்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்சசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கை, கால்கள் மற்றும் உடல் முழுதும் கொப்பளங்கள் ஏற்பட்டு வருவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இக்காய்ச்சல் குறித்து பெற்றோர்களுக்கு போதிய விழிப்புனர்வு  இல்லாததால்  குழந்தைகளின் நிலை குறித்து பெற்றோர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். 
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை விட்டு விட்டுப் பெய்து வருவதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 
வைரஸ் காய்ச்சால் ஏராளமான பெரியவர்களும், பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சல் ஒரு குழந்தையில் இருந்து மற்ற குழந்தைகளுக்கும் பரவி வருவதால் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே கிராமப் பகுதிகளில் சுகாதாரத்துரையினர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com