அம்மா திட்ட முகாமில் மின்னணு குடும்ப அட்டை வழங்கல்

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்குட்பட்ட ஒரத்தூர் பகுதியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 18  பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அம்மா திட்ட முகாமில் மின்னணு குடும்ப அட்டை வழங்கல்


ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்குட்பட்ட ஒரத்தூர் பகுதியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 18  பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வருவாய் ஆய்வாளர் இந்திராணி முன்னிலை வகித்தார். 
ஸ்ரீபெரும்புதூர் மண்டல துணை வட்டாட்சியர் பூபாலன் தலைமை வகித்து, ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த 18 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். 
இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா உட்பிரிவு, குடும்பஅட்டையில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சுமார் 58 பேர் மனுக்களை வழங்கினர்.  
இதில், மணிமங்கலம்-படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் என்.டி. சுந்தர், வனக்குழு தலைவர் சுபாஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஹேமமாலினி (ஒரத்தூர்), தங்கராஜ் (நீலமங்கலம்) உள்ளிட்ட வருவாய்த்துறை  அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
முகாமில் பங்கேற்ற அனைவருக்கும்  ஒரத்தூர் முன்னாள்  ஊராட்சி மன்றத் தலைவர் கற்பகம் சுந்தர் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com