காஞ்சிபுரம்

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

16th Aug 2019 04:28 AM

ADVERTISEMENT


கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு,  சத்யநாராயணா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
 சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனம் உள்ளது. இங்கு ஒவ்வொரு  பௌர்ணமியை முன்னிட்டு பௌர்ணமி பூஜை,  சத்ய நாராயணா பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடி மாதத்துக்கான பௌர்ணமியை முன்னிட்டு பிருந்தாவன வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை காலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. 
கருவறை ராகவேந்திரர்,  ஆஞ்சநேயர் திருவுருவச் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு தவயோக பீடத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக யோகநிலையில் இருந்து வரும் பீடாதிபதி ரகோத்தம சுவாமியை மேளதாளம் முழங்க, பஜனை கோஷ்டியினர்களின் பாடல்களை பாடி ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் பிருந்தாவன வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சத்யநாராயணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகளை  பீடாதிபதி ரகோத்தம சுவாமி  செய்தார்.    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT