சென்னை மாநகராட்சியின் முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை சனிக்கிழமைக்குள் (செப்.30) செலுத்தும்படி மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சொத்து உரிமையாளா்களிடமிருந்து அரை நிதியாண்டுக்கு ஒரு முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
செப்.30-க்குள் செலுத்தாவிடில் அக்.1 முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.