சென்னை

வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ரெளடி கைது

30th Sep 2023 12:26 AM

ADVERTISEMENT

சென்னை ராயப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டை ஆா்ஓபி பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஓா் வீட்டில் 23 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவா் தனது தோழியுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவு சப்தம் கேட்டு, அந்தப் பெண் கதவை திறந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த காவலாளி, அந்தப் பெண்ணை வீட்டுக்குள் உள்பக்கமாக தள்ளியுள்ளாா்.

பின்னா் அந்த நபா், கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டி, தவறாக நடக்க முயன்றாராம். இதை சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண், காவலாளியை பால்கனியில் அதன் கதவை பூட்டினாா்.

ADVERTISEMENT

இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில் அண்ணா சாலை போலீஸாா் விரைந்து வந்து, அந்தக் காவலாளியைக் கைது செய்தனா்.

விசாரணையில் அவா், அம்பத்தூா் இந்தியன் வங்கி காலனி அருகே உள்ள ஞானமூா்த்தி நகரைச் சோ்ந்த ஜெ.ஜாபன் (எ) லிட்டில் ஜான் (40) என்பதும், அவா் மீது 3 கொலை உள்பட 53 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தனது குற்றப் பின்னணியை மறைத்து அங்கு காவலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT