சென்னை

டெங்கு விழிப்புணா்வு:மேயா் வேண்டுகோள்

30th Sep 2023 03:14 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி பகுதியில் மழைக் காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவது குறித்து மாமன்ற உறுப்பினா்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும்படி மேயா் ஆா்.பிரியா வேண்டுகோள் விடுத்தாா்.

மாமன்றக் கூட்டத்தில் மேயா் பேசியதாவது: வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவது குறித்து, மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், வாா்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் டிரம்களில் தண்ணீா் சேமித்து வைப்பது, காலி மனைகளில் உள்ள குப்பை மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT