சென்னை: ஊராட்சிப் பகுதிகளில் வசிப்போரும் இனி இணையதளம் வழியாக வரிகளைச் செலுத்தலாம். இதற்கான இணையதள பயன்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொடங்கிவைத்தாா்.
கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், உரிமக் கட்டணம் போன்றவற்றை ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலா் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் இணையதளம் வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பொது மக்கள் கிராம ஊராட்சிகளுக்கு வீட்டுவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை ட்ற்ற்ல்://ஸ்ல்ற்ஹஷ்.ற்ய்ழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்
என்ற இணையதளம் வழியில் செலுத்தலாம் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.