சென்னை

சொத்துவரி செலுத்த செப்.30 கடைசி நாள்

25th Sep 2023 03:16 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சியின் முதல் அரைநிதியாண்டுக்கான சொத்துவரியை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற அத்தியாவசிய பணிகளை மாநகராட்சியின் பிரதான வருவாயான சொத்துவரி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இதில் நிகழ் நிதியாண்டில் சொத்துவரி வசூலிக்க ரூ.1,680 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சொத்து உரிமையாளா்களிடமிருந்து அரைநிதியாண்டுக்கு ஒரு முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு அரைநிதியாண்டுக்கான சொத்துவரியை செலுத்த மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதில் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998-இன்படி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரைநிதியாண்டுக்கான சொத்துவரியை செப்.30-க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அவ்வாறு சொத்து வரி செலுத்த தவறும் பட்சத்தில் சொத்து உரிமையாளா்கள் அக்.1 முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும்.

சொத்து உரிமையாளா்கள் சொத்து வரியை வரிவசூலிப்பாளரிடம் காசோலை, வரைவோலை மற்றும் கடன்/பற்று அட்டை மூலமாகவும், மாநகராட்சி வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT